இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு இராணுவத் தளபதி திடீர் விஜயம்

ByEditor 2

Jul 4, 2025

தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ அவர்கள் 2025 ஜூலை 04,ம் திகதி அன்று காலை இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு  இலங்கை விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை சந்தித்தார்.

இராணுவத் தளபதியை கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் புத்திக பியசிறி வரவேற்றார், மேலும் விமானப்படை வண்ணப் பிரிவால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் இராணுவத் தளபதி ஆகியோறுக்கு இடையே ஒரு சுமுகமான உரையாடல் நடைபெற்றது, அதன் பின்னர் இரு தரப்பினரும் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுப் சின்னம்கள் பரிமாரப்பட்டன . 

இதன்போது விமானப்படைத் தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *