போக்குவரத்து நெரிசல்; பொலிஸ் எச்சரிக்கை

ByEditor 2

Jul 4, 2025

கொழும்பு – அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி நேரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், போமிரிய மத்திய மகா வித்தியாலயம் அதன் 106ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீதி அணிவகுப்பு காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

யானைகள் உள்ளிட்ட சுமார் 25 நடனக் குழுக்களின் பங்கேற்புடன் இந்த வீதி அணிவகுப்பு மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி, நவகமுவ சுகதபிம்பாராம புராதன ராஜமகா விகாரையில் இருந்து குறித்த வித்தியாலயம் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, நவகமுவ தேவாலயத்திற்கு அருகில் இருந்து கடுவெல நோக்கி போமிரிய மத்திய மகா வித்தியாலயம் வரையிலான பிரதான வீதியில் சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு, பயணிகள் கீழ்க்கண்ட மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *