தேசிய நுளம்பு ஒழிப்பு,இன்று மூன்றாவது நாள்

ByEditor 2

Jul 2, 2025

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது நாளான இன்றும் (02) நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, நேற்றைய தினம் (01) 22,294 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 4,965 இடங்கள் கண்டறியப்பட்டதாகவும், நுளம்பு குடமிகள் உள்ள 657 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 553 பேருக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், 153 பேருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2 நாட்களில் மொத்தமாக 48,354 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் நுளம்பு குடமிகள் பெருகக்கூடிய 10,591 இடங்கள் கண்டறியப்பட்டதாகவும், இது ஒவ்வொரு 10 இடங்களில் ஒரு இடம் என்ற விகிதத்தில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

அத்தோடு, 1,611 இடங்களில் நுளம்பு குடமிகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 1,193 சிவப்பு அறிவிப்புகளும், 256 வழக்கு தொடரல்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டு, எதிர்வரும் 5ஆம் திகதி வரை செயல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *