இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா?

ByEditor 2

Jun 30, 2025

இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் ஆபத்தான நோய்களில் ஒன்று நீரிழிவு (Diabetes). ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

சிலர் அறிகுறிகள் இல்லாமலே, இரத்த சர்க்கரை அளவு (blood sugar level) அதிகமாக இருக்கும் நிலையை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes) என்பது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களை நேரடியாகக் கொண்டே உருவாகும் ஒரு நிலை.

இதில், நாம் காலையில் பழக்கமாக செய்யும் சில சிறிய தவறுகள் கூட, சர்க்கரை அளவை உயர்த்த மிக முக்கிய காரணங்களாக அமைவகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காலையில் செய்யும் இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா? | Morning Habits That Raise Blood Sugar How Control

காலை நேரம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிக முக்கியமான நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் சாப்பிட்டாலோ அல்லது தவறாக நடந்து கொண்டாலோ, அது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கும்.

சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில தவறான காலை பழக்கங்கள்

நாம் தினமும் செய்வதற்குப் பழக்கமாகிவிட்ட சில தவறான காலை பழக்கங்கள் தான், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தள்ளும் முக்கிய காரணங்களில் ஒன்று என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

காலையில் செய்யும் இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா? | Morning Habits That Raise Blood Sugar How Control

சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய சில பொதுவான பழக்கங்கள்

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்காமல் நேராக டீ அல்லது காபி குடிப்பது காலை உணவைத் தவிர்ப்பது அல்லது தாமதமாகவே சாப்பிடுவது நீண்ட நேரம் பசியுடன் இருப்பது உடற்பயிற்சி அல்லது எந்தவொரு உடல் அசைவும் இல்லாமல் இருப்பது இவை அனைத்தும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை விரைவாக உயரச்செய்யும். இவ்வாறு நீண்ட நாட்கள் தொடர்ந்தால், டைப் 2 நீரிழிவு உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.

காலையில் செய்யும் இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா? | Morning Habits That Raise Blood Sugar How Control

காலையில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்

பலர் காலையில் எழுந்தவுடன் இனிப்பு தேநீர் அல்லது காபியை முதல் பானமாக உட்கொள்கிறார்கள். இந்த பழக்கம், வெறும் வயிற்றில் உடலுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை திடீரென உயர்த்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், காலை உணவை தாமதப்படுத்துவது அல்லது முழுவதுமாக தவிர்ப்பது உடலில் உள்ள இன்சுலின் அளவை சமநிலையற்றதாக மாற்றத் தொடங்கும். இதனால், சர்க்கரை அளவு திடீரென உயர்வதும், அதைவிட ஆபத்தானது திடீரான சரிவு ஏற்படுவதும் கூடச் சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *