வெடிபொருட்களுடன் சிக்கிய லொறி!

ByEditor 2

Jun 30, 2025

ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளன.

திருகோணமலை பிரதான வீதியில் ஹதரஸ்கொட்டுவ பொலிஸாரினால் சம்பந்தப்பட்ட லொறி நிறுத்தப்பட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, சாரதியின் இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டின் கீழ் C4 எனப்படும் வெடி மருந்துகள் கொண்ட பையை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாரினால் கைப்பற்றப்ட்ட வெடி மருந்துகளின் நிறை 156.07 கிராம் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த வெடி மருந்துகள் அதிக சக்தி வாய்ந்தவை என்றும், இதனைக் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

இந்த வெடிபொருட்கள் கந்தளாய் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. 

அதன்படி, வெடி மருந்துகளை குறித்த பகுதிக்கு கொண்டு சென்றதன் நோக்கம் குறித்து ஹபரணை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சந்தேக நபரும் லொறியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *