கற்பிட்டி, தலவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 1350 கிலோ பீடி இலைகள் அடங்கிய 45 பொதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர், இவைகளை கைப்பற்றியதுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பீடி இலைகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.