தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி – ஜனாதிபதி சந்திப்பு

ByEditor 2

Jun 27, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ  ம்பெக்கி இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார்.

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். 

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள  தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று  ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் செண்டில் ஷால்க், தபோ ம்பெக்கி நிதிய பிரதம நிர்வாக அதிகாரி மெக்ஸ்வெல் போக்வானா, தபோ ம்பெக்கி நிதிய பிரதம செயல்பாட்டு அதிகாரி லுக்ஹன்யோ நீர்  ஆகியவர்களும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்  ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்  ரோஷன் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *