எல்ல வனப்பகுதியில் வேகமாக பரவும் தீ

ByEditor 2

Jun 26, 2025

நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக எல்ல சுற்றுலாப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வன பாதுகாப்பு அதிகாரிகளால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தியத்தலாவ இராணுவ முகாமை சேர்ந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த வனப்பகுதிக்கு அருகில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குப்பைகளுக்கு தீ வைக்க முயற்சித்த போது கவனக்குறைவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இப்பகுதியில் ஏலவே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டு பாரியளவான வனப்பகுதி அழிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *