மைத்துனரை வெட்டிக் கொன்ற மைத்துனர் 

ByEditor 2

Jun 25, 2025

மட்டக்களப்பு , கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மைத்துனர்கள் இருவருக்கிடையில்  ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்  செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது.

கரடியனாறு , உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வீரையா விஜயகாந்த் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மைத்துனர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை (24) மாலை வீட்டை விட்டு வெளியேறி புளுட்டுமானோடை பகுதியில் வேளாண்மை காவலுக்காக வயலுக்கு சென்று, வாடியில் தங்கியிருந்த நிலையில் மதுபானம் அருந்திய இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  இதன்போது சந்தேக நபர் , மற்றவர் மீது கோடாரியால் தாக்கியதில் பலத்த காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸ் தடயவியல் பிரிவினர்; வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *