யாழ். செம்மணி புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
செம்மணி வளைவு அருகே இன்று முற்பகல் 10.10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நண்பகல் 12 மணிக்கு புதைகுழி கண்டறியப்பட்ட சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகும். அங்கிருந்து, செம்மணி வீதி வழியாக மனித சங்கிலி முறைமையில் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியின் பணிமனை வரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று, மனு கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.