கனடா பயணமானார் பிரதமர்

ByEditor 2

Jun 24, 2025

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு செவ்வாய்க்கிழமை (24) காலை புறப்பட்டுச் சென்றார். அவர், அங்கு நடைபெறும்  பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்வார்.

பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழு கனடாவின் வான்கூவரில் ஜூன் 24 முதல் 26 வரை நடைபெறும்.

இந்த குழுவில், குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் செயலில் கற்றலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு ஆகிய துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு, நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவையும் விவாதிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *