அமைதி இல்லையேல் அழிவு: ட்ரம்ப் எச்சரிக்கை

ByEditor 2

Jun 22, 2025

ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும், ஒன்று அமைதி இல்லையேல் அழிவு என உறுதிப்பட கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத விதமாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு தளங்கள் மீது தங்கள் நாட்டின் விமானப்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இருக்கிறார். இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,” ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம். அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும்” என கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *