மான் இறைச்சி வைத்திருந்த இருவரை நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நல்லத்தண்ணி தோட்டத்தை சேர்ந்த இருவரையே வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க மேலும் கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மான் இறைச்சியை தாங்கள் வைத்திருந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு, ஜூலை 18ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.