கம்பஹா மருத்துவமனையில் பதற்றம்

ByEditor 2

Jun 20, 2025

கம்பஹா மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் நோயாளிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, இதில் நோயாளிகள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பெற காத்திருக்கும்போது தாமதங்கள் மற்றும் ஒழுங்கீனம் காரணமாக இந்த பதற்றமான நி​லைமை ஏற்பட்டதா கூறப்படுகிறது.

மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் வரிசைகளை சரியாக நிர்வகிக்கவும், நோயாளிகளின் கவலைகளை நிவர்த்தி செய்யவும் தவறிவிட்டதாக நோயாளிகள் கூறினர், இதனால்  வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு உள்ளவர்களுக்கு கடுமையான சிரமம் ஏற்பட்டது.

சில நோயாளிகள் வரிசையில் இருந்த மற்றவர்களை கடந்து செல்ல முயன்றபோது பதற்றம் அதிகரித்ததாகவும், இதனால் காத்திருந்தவர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *