இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லது “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
குறித்த ஆயுதம் அமெரிக்காவிற்கு மட்டுமே இது சொந்தமானதாகும்.
துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.
இதுவரை, எம்ஓபி வெடிகுண்டை உபயோகிப்பதற்கான அனுமதியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.