பல்கலை மாணவர் தற்கொலை – (UPDATE)

ByEditor 2

Jun 18, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் சரித் தில்ஷான் தயானந்தா கடுமையான பகிடி வதைக்கு உள்ளாகி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஜூலை 18 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (18) திகதியிட்டது. 

எஸ். துரை ராஜா, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று அழைக்கப்பட்டது. 

சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனுவை ஜூலை 18 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *