அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை

ByEditor 2

Jun 18, 2025

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிக்கவே கூடாது என்று ஜி7 நாடுகள், திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (17) வெளியிடப்பட்டது.அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “மத்திய கிழக்கில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ ஜி7 நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளோம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கிறோம்.

பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், பிராந்திய நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது. எனவே, ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால், காசா உட்பட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும்.

சர்வதேச எரிபொருள் சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம். சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவோம்” என்றும் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *