நாட்டின் முக்கியமான புகையிரத பாதைகள் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (17) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, பேசிய இலங்கை புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.டி.டி.பிரசாத்,
வேலை நிறுத்தத்தைத் தொடங்குவதற்கான முடிவு தொழிற்சங்க உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது என்றார்.
ரயில்வே துறையில் முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.