பாராளுமன்றத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு அமைக்கப்பட்டது

ByEditor 2

Jun 18, 2025

நேர்மையான அரசாங்க சேவையை நோக்கி நகரும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் 2025 பெப்ரவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்ட PS/SB/Circular/2/2025 இலக்க சுற்றறிக்கைக்கு அமைய பாராளுமன்ற உள்ளக அலுவல்கள் பிரிவை அமைப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவின் முக்கிய நோக்கமாக, ஊழலைத் தடுப்பது மற்றும் நிறுவனத்திற்குள் நேர்மையான கலாச்சாரத்தை வளர்ப்பது, நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் நிறுவன நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல், நிறுவனத்திற்குள் நெறிமுறை நிர்வாகத்தை ஊக்குவித்தல், தவறான நடத்தைகளைப் முறையிடுவதை ஊக்குவித்தல், தகவல் தெரிவிப்பவர்களைப் பாதுகாத்தல் மற்றும் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கான பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சட்ட அமுலாக்க முகவர்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட அமுலாக்கத்திற்கு உதவுதல் என்பனவாகும்.

பாராளுமன்றத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவராக பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன பணியாற்றுவதுடன், நேர்மை அதிகாரியாக உள்ளகக் கணக்காய்வாளர் தினேஷ் விதான அவர்கள் பணியாற்றுவார். இந்தப் பிரிவின் ஏனைய உறுப்பினர்களாகப் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்கள் செயற்படவிருப்பதுடன், சகல திணைக்களங்களையும் பிரதிநிதித்துவுப்படுத்தும் ஒத்துழைக்கும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்தப் பிரிவின் முதல் கூட்டம் 2025 ஜூன் 6 ஆம் திகதி அந்தப் பிரிவின் தலைவரும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும், சுற்றறிக்கையின் விதிகளின்படி இந்தப் பிரிவின் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *