பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்

ByEditor 2

Jun 18, 2025

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சரியான கருத்து என்றும் அதேநேரத்தில் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்துகிறார். 

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று (18) “இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்” என்ற தலைப்பின் கீழ் உலக வங்கி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றுகையில் பிரதமர் இதனை வலியுறுத்தினார். 

சிறுவர் பராமரிப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகமாக நாட்டின் பொருளாதாரத்துடன் இணைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி அவர்களுக்கு தொழிலாளர் படையில் உயர்ந்த முன்னேற்றம் கிடைக்கும் வழியை திறப்பது எவ்வாறு என்பது பற்றி விவாதிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

இங்கு மேலும் கருத்துக்களை தெரிவிக்கையில் பிரதமர் வலியுறுத்தியது, சம்பளம் பெற்றாலும் அல்லது பெறாவிட்டாலும் தனது உழைப்பை வழங்கும் பெண் பொருளாதாரத்தின் மையமான காரணியாகும். 

ஆனால், சமூக ரீதியாக அவருக்கு உள்ள பல்வேறு தடைகளை எதிர்கொண்டு பெண்களுக்கு தொழிலாளர் படையுடன் இணைவதற்கு உள்ள வாய்ப்பு பெரிதும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

புள்ளிவிபரங்களின் படி 32% ஆக உள்ள நமது நாட்டின் பெண் தொழிலாளர் படை பங்களிப்பு உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *