ஹொங்கொங்கிலிருந்து இந்தியாவின் புதுடில்லி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எயர் இந்தியா (Boeing 787-8 Dreamliner AI315) விமானமொன்று நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஹொங்கொங் திரும்பியுள்ளது.
நடுவானில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்ததை தொடர்ந்து ஹொங்கொங்கிற்கு விமானத்தை மீண்டும் திருப்பியுள்ளார்.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது, தொழில்நுட்ப கோளாறு குறித்த மேலதிக தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை கடந்த வாரம் எயர் இந்தியா விமானம் ஒன்று இந்தியாவில் விபத்துகுள்ளானதில் அதில் பயணித்த 241 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.