மத்திய ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவம்

ByEditor 2

Jun 16, 2025

மத்திய ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய ஈரானில், ஏவுகணை தளங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சகக் கட்டிடம் தாக்கப்பட்டதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு எதிரே அமைந்துள்ள ஐபிஐஎஸ் கட்டிடமும் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது.

ஈரானின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்த அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் சயீத் கதிப்சாதே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், குறித்த அமைச்சக கட்டிட தாக்குதல் குறித்து இஸ்ரேலிடமிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் தனது நாட்டின் மீது தாக்குதல்களைத் தொடங்கத் தொடங்கியதிலிருந்து 224 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தேசிய அவசர சேவை, வடக்கு இஸ்ரேலின் ஹைஃபாவில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஹைஃபாவில் எறிகணைகள் தரையிறங்கியதாகவும், அதன் தாக்கத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஈரானில் உள்ள டஜன் கணக்கான மேற்பரப்புகளை குறிவைத்து குறித்த ஏவுகணை வான்வழித் தாக்குதல்களை தொடங்கியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *