தீவிரமடையும் எலிக்காய்ச்சல்

ByEditor 2

Jun 16, 2025

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் துஷானி பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் , லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது. நோய்த் தொற்றுக்கு ஆளான எலிகளின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுவதால் எலிக்காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

அண்மைகாலமாக நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி ,குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகின்றனர் பற்றீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் நடமாடுதல், விளையாடுதல், பயிர்ச்செய்கை மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அவதானத்துடன் செயல்படுவது நல்லது. மேலும் சுற்றுலாவுக்காக செல்வோர் நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல், விளையாட்டு சாகசங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

நோய் அறிகுறிகள் வெளிப்பட சுமார் 7 தொடக்கம் 14 நாட்களாகக் கூடும். ஆகையால் அதானம் மிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு பணியை மேற்கொள்பவர்கள் காய்ச்சல்கள் ஏதும் ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை நாடுதல் வேண்டும்.

நோய்த் தொற்றுக்கு ஆளானவரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் சிவத்தல், வாந்தியும் குமட்டலும் போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதனை கருத்தில் கொண்டு அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *