வாகனங்களை விற்பனை செய்த இருவர் கைது

ByEditor 2

Jun 14, 2025

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விசாரணையின் போது, ​​அனுராதபுரத்தில் வாடகை அடிப்படையில் வேனைப் பெற்று அதை 1.04 மில்லியன் ரூபாய்க்கும், பொரளையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று 9 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 

மேலும் பாணந்துறையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டியவில் வாடகை அடிப்படையில் 2 கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *