ஏர் இந்தியா விமானத்தின் ’’கருப்பு’’ பெட்டி மீட்கப்பட்டது

ByEditor 2

Jun 13, 2025

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்றைய தினம் விபத்தில் சிக்கியது. 

அந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி தவிர அனைவரும் உயிரிழந்தனர். இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டி இப்போது மீட்கப்பட்டுள்ளது. 

விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிய கருப்பு பெட்டியில் உள்ள தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு செல்லவிருந்தது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் நேற்று 1.17 மணியளவில் புறப்பட்டது. உள்ள 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். 

இருப்பினும், விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் அது விபத்தில் சிக்கியது. 625 அடி உயரத்தை மட்டுமே விமானம் அடைந்த நிலையில், அது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. 

அப்படியே மெல்ல சரிந்த விமானம் விபத்தில் சிக்கியது. கீழே விழுந்து நொறுங்கிய விமானம், அப்படியே தீப்பிழம்பாக வெடித்து சிதறியது. அதில் விமானத்தில் பயணித்த ஒரு பயணி தவிர அனைவரும் உயிரிழந்தனர். 

இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை. 

விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. விமானம் விபத்திற்குள்ளான நொடி வரை அனைத்து டேட்டாவும் இந்த கருப்பு பெட்டியில் தான் சேமிக்கப்பட்டு இருக்கும். 

இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டி இப்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 

வரும் நாட்களில் கருப்பு பெட்டியை ஆய்வு செய்தால் விபத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *