அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது

ByEditor 2

Jun 13, 2025

விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது.

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது அதிர்ஷ்ட எண்ணாகப் பல காலமாக நம்பினார். இதனால் அவரின் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் 1206 என்றே இருந்தன. ஸ்கூட்டர், கார் எனத் தனது தனிப்பட்ட வாகனம் எதுவாக இருந்தாலும் அவரின் பதிவெண் 1206 தான். அவர் வாங்கிய முதல் ஸ்கூட்டரில் இந்த நம்பர் தான் உள்ளது. அதேபோல் காரிலும் இதே நம்பர் தான்.

ஆனால் விதி விஜய் ரூபானியின் இந்த நம்பிக்கையில் விளையாடியிருக்கிறது. பல தசாப்தங்களாக அவர் நம்பிக் கொண்டிருந்த 1206 எண்ணைக் கொண்ட திகதியிலேயே விஜய் ரூபானியின் உயிர் பிரிந்தது.

 ஜூன் 12 அதாவது 12.06ம் திகதியில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி விஜய் ரூபானி மரணமடைந்தார். பல வருடங்களாக விஜய் ரூபானி நம்பிய அதே அதிர்ஷ்ட எண்ணை விதியும் தேர்ந்தெடுக்க 12.06 அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசித் திகதியாக அமைந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *