அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு

ByEditor 2

Jun 12, 2025

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(12) பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான   ஏர் இந்தியா விமானத்தில்    குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்த  நிலையில்,   133 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

லண்டனுக்கு பற விமானம் புறப்பட்ட சிறிது நேர்ந்த்தில் விபத்துக்குள்ளானதில், 52 பிரிட்டன் பிரஜைகள் பயணித்ததாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் விமான விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.   

அதேவேளை  விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில்  242 பேர் பயணித்த நிலையில் அவர்களில் , 7 குழந்தைகள் மற்றும்  இரு  கைக்குழந்தைகளும்  பயணித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மீட்ப்பு பணிகள் தீவிரமாக  முன்னெடுக்கப்படுள்ளதாக  இந்திய  தகவ்ல்கள் தெரிவிக்கின்ற நிலையில்  இக்கோர விமான விபத்து இந்தியாவை உலுக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *