மருமகளின் கிட்னியை கேட்டு மாமியார் கொடுமை

ByEditor 2

Jun 11, 2025

திருமணத்திற்கு வரதட்சணையாக மணப்பெண்ணின் குடும்பத்திடம் இருந்து நகை, பணம், கார் போன்றவற்றை தான் வாங்குவார்கள்.

ஆனால், இந்தியாவில்  மருமகளின் கிட்னியை கேட்டு மாமியார் கொடுமை செய்த   சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கணவருக்கு சிறுநீரகக் கோளாறு 

இந்திய மாநிலமான பீகாரில் தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

2021-ம் ஆண்டு திருமணமான தீப்தி எனும் அப் பெண்ணை மாமியார் குடும்பத்தினர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

தீப்தியின் கணவருக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கும் காரணத்தால் மருமகளின் கிட்னியை வரதட்சணையாக மாமியார் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். எனினும்   மருமகள் அதற்கு மறுத்த்தால் கணவ்ர் வீட்டினால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார், பெண்ணின் கணவர் உட்பட மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *