நாளை பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

ByEditor 2

Jun 10, 2025

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *