பூனைகளை வரதட்சணையாகப் பெற்ற மணப்பெண்!

ByEditor 2

Jun 10, 2025

வியட்நாமைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு 100 civet ரக பூனைகள் வரதட்சணையாகக் கிடைத்துள்ளன. வரதட்சணையாகக் கிடைத்த பூனைகளின் மதிப்பு 70,000 டாலர் என கூறப்படுகின்றது.வியட்நாமில் civet ரக பூனைகள் விலையுயர்ந்தவை. அவற்றைப் பலர் பெரும்பணத்துககு விற்பது வழக்கம்.அதுமட்டுமல்லாது அவை Kopi Luwak எனும் ஆக விலையுயர்ந்த காப்பி வகையின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.இந்தப் பூனைக்குட்டிகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சத்திற்கும் மேல் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பூனைக்குட்டிகள், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோபி லுவாக் காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.ஆசிய பனை பூனைகளுக்கு காபி விதைகள் உணவாக அளிக்கப்பட்டு, அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றப்படும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.இந்த காபி கொட்டை தொழிலை தங்கள் மகள் தொடங்க உதவுவதற்காகவே இந்தப் பூனைகளை வரதட்சணையாக அளித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.அதேவேளை Civet பூனைகளின் மாமிசமும் சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.இந்நிலையில் civet பூனைகளை விற்கும் வழக்கம் கொடூரமானது என்று விலங்கு நலப் பிரியிர்கள் கூறுகின்றனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *