முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது

ByEditor 2

Jun 9, 2025

முச்சக்கர வண்டியொன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராகம பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (08) பிற்பகல் ராகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையில் 9 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

சந்தேகநபர் 26 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவராவார். 

சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், 04.06.2025 அன்று ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, 1,800,000/= ரூபா பெறுமதியுடைய முச்சக்கர வண்டியைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இவரென்பது தெரியவந்தது. 

திருடப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *