ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 750 புதிய உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (09) நடைபெறவுள்ளது.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வு, முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.