12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்லத் தடை

ByEditor 2

Jun 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 12 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். 

தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அதன்படி ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ, இக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது. மேலும், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியெரா லியோன், டோகோ, தர்க்மன்ஸ்தான், வெனிசுவேலா ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்குக் மேலதிக கட்டுப்பாடுகள் இருக்கும். 

இந்தப் பயணத் தடை உத்தரவு குறித்து சிபிஎஸ் நியூஸ் ஊடகம் முதலில் செய்தி வெளியிட்டது. 

“நமக்குத் தீங்கு இழைக்க நினைப்போரை நமது நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம்,” என்று ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார். தடை விதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெறும் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் மேலும் பல நாடுகள் அதில் சேர்க்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

பயணத் தடை உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் நடைமுறைக்கு வரும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *