சடலத்தை மீட்க சென்றவர் பலி

ByEditor 2

Jun 4, 2025

வாரியபொல ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க வாரியபொல ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஆற்றில் அழுகிய நிலையில், மிதந்த சடலத்தையே அவர் பார்வையிட நீந்திச் சென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வாரியபொல – களுகமுவ வீதியில் வாரியபொல நகருக்கு அருகிலுள்ள விலக்கட்டுபொத ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நீரில் மூழ்கிய நபர் அங்கு இருந்த பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பின்னர் புத்தளம் கடற்படையினரால் இரு உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன. 

சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *