மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்

ByEditor 2

Jun 3, 2025

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள  சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குறித்த நபரை உடனடியாக கைது செய்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்டுள்ளனர். 

அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான, 32 வயதுடைய  சுகிர்தரன் சுவர்ணலதா என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகிறது.

 அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. 

கணவன் மனைவி  இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதுள்ளதுடன் கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவன் செவ்வாய்க்கிழமை (03) காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் நோக்கி சென்று அங்கு வைத்து கொலை செய்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *