விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

ByEditor 2

Jun 2, 2025

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் கடந்த 30ஆம் திகதி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த நியமனம் இடம்பெற்றது. 

இந்த தேர்வுக் குழுவின் புதிய தலைவாக ஶ்ரீயானி குலவங்ஷ தெரிவு செய்யப்பட்டார். 

குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்கள் 

ஶ்ரீயானி குலவங்ஷ (தலைவர் – தேசிய விளையாட்டு தெரிவுக் குழு) 

மேஜர் ஜெனரல் ரவீ பதிரவிதான – (செயலாளர் – தேசிய விளையாட்டு தெரிவுக் குழு) 

மேஜர் ராஜித சமரசேகர – (ஒருங்கிணைப்பு அதிகாரி – தேசிய விளையாட்டு தெரிவுக் குழு) 

கமல் கம்லத் – ஓய்வு (விளையாட்டு பொறுப்பதிகாரி – விளையாட்டுத்துறை அமைச்சு) 

ருவன் பெரேரா (பாடசாலை விளையாட்டு பிரதி பணிப்பாளர் – சசெக்ஸ் கல்லூரி) 

ஜயமினி இலெபெரும – (ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி – ஹற்றன் நெஷனல் வங்கி) 

சுரேஷ் சுப்ரமணியம் – (தலைவர் – தேசிய ஒலிம்பிக் குழு) 

அனுராதா இலேபெரும (மேலதிக செயலாளர் – இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *