முருத்தவெல நீர்த்தேக்க தெற்கு கால்வாய் பொதுமக்கள் பாவனைக்கு

ByEditor 2

Jun 2, 2025

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டுஇ முருத்தவெல தெற்கு நீர்த்தேக்க கால்வாயின் புனரமைப்புப் பணிகள் 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் கால்வாய் சமீபத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அம்பாந்தோட்டா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் தலைமையில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முருத்தவெல நீர்த்தேக்கம் 18இ200 குடும்பங்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. மேலும் முருத்தவெல நீர்த்தேக்க தெற்கு கால்வாய் திட்டம் 5900 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு பயனளிக்கும். இதன் நீளம் 7.9 கி.மீ. ஆகும். இது 28 குளங்களுக்கு நீர் வழங்கும். இது 1257 ஏக்கர் விவசாய நிலத்தின் பயிர்ச்செய்கைகளுக்கு தண்ணீரை வழங்கியது. வீரகெட்டி பிரதேச நீர்ப்பாசன பொறியியல் அலுவலகம் தெற்கு கால்வாயை இரண்டு மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் ரூ. 1.14 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *