அழிவடைந்துவரும் “பந்துல பெத்தியா” மீன்கள் 

ByEditor 2

Jun 2, 2025

நாட்டில் அழிந்து வரும் அரிதான மீன் இனத்தைச் சேர்ந்த “பந்துல பெத்தியா” மீன்கள் வாழும் பகுதியை பாதுகாப்பு மண்டலமாக மாற்ற சுற்றுச்சூழல் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பல்லுயிர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்தின் ஒரு பகுதியாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றாடல் அமைச்சு வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நாட்டிற்கு மட்டுமே உரித்தான மீன் இனமான பந்துல பெத்தியா, வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவுக்குள் உள்ள கலபிடமட பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. 

அதன்படி, இன்று (2) பிற்பகல் சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜெயக்கொடி தலைமையில் கலபிடமட பகுதியில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இந்த திட்டம் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெறுகிறது. 

இங்கு, “பந்துல பெத்தியா” மீன்களின் பாதுகாப்பு குறித்து கலபிடமட பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களும், இந்த அரிய வகை மீன்கள் வசிக்கும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் மரம் நடும் வேலைத்திட்டமும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *