எஹெலியகொட – நெந்துரன சந்தியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் நேற்று (30) இரவு மூன்று பேர் மீது குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் இத்தமல்கொட, கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.