கணவர் வெளிநாட்டில் மனைவி படுகொலை

ByEditor 2

May 30, 2025

அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 பல இடங்களில் வெட்டுக்காயங்கள்

சம்பவத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37வயது மதிக்கத்தக்க பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

மரணமடைந்த குடும்பப்பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளதாகவும் கொலை இடம்பெற்ற போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த, சிசிடிவி காணொளி கொலையாளியினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன், அம்பாறை தடயவியல் பொலிஸாருடன்  பெரிய நீலாவணை பொலிஸாரும்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *