மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா; இலங்கை அழகிக்கு இரண்டாம் இடம்

ByEditor 2

May 30, 2025

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, குறித்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கையர் இவராகும் என்று, அவரது ஊடகக் குழு தெரிவித்துள்ளது.

8 உலகளாவிய வெற்றியாளர்கள்

இந்த சாதனையின் மூலம், 108 பங்கேற்பாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டிமீடியா சவாலின் முதல் 8 உலகளாவிய வெற்றியாளர்களில், மதிப்புமிக்க இடத்தையும் அனுதி குணசேகர பெற்றுள்ளார்.

இதேவேளை இறுதிப்போட்டி நாளை நடைபெறும் போது புதிய உலக அழகி முடிசூட்டப்படவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *