ஷார்ஜாவில் கலக்கிய இலங்கை பெண்கள்

ByEditor 2

May 29, 2025

ஷார்ஜாவில்  உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற  26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29)  வந்தடைந்தனர்.

சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். 

நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் நீர்கொழும்பில் ஒரு சமையல் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

போட்டியில் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அவர் கொழும்பில் வசிப்பவர், 

அவர்கள் மூவரும் முதல் முறையாக இதுபோன்ற ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெறுவது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *