72 வது உலக அழகி போட்டியில் ‘Multimedia Challenge’பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இது இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும்.
உலக அழகி போட்டி ஒன்றில், fast-track events பிரிவில் இலங்கை முதல் 20 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை.
ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் ‘Multimedia Challenge’பிரிவில் 5 இறுதிப் போட்டியாளர்களாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, Miss World 2025 இறுதிப் போட்டிகள் மே மாதம் 31 ஆம் திகதி ஹைதராபாத் சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும்.