அண்மைய நாட்களில் நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதான இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, புத்தளம், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மொத்தம் 1,520 பேர் பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை தொடர்பான சம்பவங்கள் காரணமாக எட்டு பேர் காயமடைந்துள்ளனர்., 325 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.