உலக சாதனை படைத்த மழலை

ByEditor 2

May 28, 2025

சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனிகா தம்பதியரின் மூன்று வயதான மகள் தஸ்விகா, 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச்சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைத்து, மழலை மொழி வித்தகர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

இந்த நிகழ்வானது சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நடுவர்களாக இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாக வாணி ராஜா, யாழ் மாவட்டத்தலைவர் துரை பிரணவச் செல்வன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தலைவர் ராசதுரை ஜெய சுதர்சன்போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.

குழந்தையின் முயற்சியை உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள், அதை உலக சாதனையாக பதிவு செய்தார்கள். சோழன் உலக சாதனை படைத்த குழந்தை தஸ்விகாவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்,நினைவுக் கேடயம், அடையாள அட்டை,தங்கப்பதக்கம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்ட அதேவேளை, இச் சிறிய வயதில்அவர் கொண்டிருந்த மொழி பெயர்ப்புத் திறனை ஊக்கப்படுத்தினர்.

சோழன் உலக சாதனைப்புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங்பீபல்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வை தென்மராட்சியைச்சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்கள்.யாழ் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு கற்கைகள் துறைத் தலைவர் ச.க.கண்ணதாசன்  முதன்மை  விருந்தினராக பங்கு கொண்ட சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வாழ்த்திப்பாராட்டினார்.

தென்மராட்சிக்கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.அபிராமி சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு குழந்தைக்குப்பரிசளித்துப் பாராட்டினார். சத்தியாதனுராஜ்- அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒத்துழைப்புடன்  நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *