பிரான்ஸ் ஜனாதியின் முகத்தைப் பிடித்த பெண்

ByEditor 2

May 27, 2025

வியட்நாமுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தொடர்பான ஒரு செய்தி தற்போது  ஊடகங்களில்  பரவி வருகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானம் ஹனோய் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, கதவுகள் திறக்கப்பட்டு, ஜனாதிபதி விமானத்துடன் இணைக்கப்பட்ட படிக்கட்டுகளில் இறங்குவதை வியட்நாமிய அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.  

விமானக் கதவு திறக்கும் போது, ​​ஒரு பெண்ணின் கை மக்ரோனின் முகத்தைப் பிடித்துக் கொண்டு கண்டிக்கும் சைகையில் இருப்பது அவதானிக்க முடிந்துள்ளது.  

அது கீழே உள்ள பத்திரிகையாளர்களின் கேமராக்களில் பதிவாகியுள்ளது. அத்துடன் மக்ரோன் அதை மறைப்பதற்கு முயற்சிப்பதும் கேமராக்களில் பதிவாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியே இவ்வாறு செயல்பட்டுள்ளதுடன்  பின்னர் இருவரும் விமானத்திலிருந்து இறங்கியுள்ளனர். ஜனாதிபதி தனது மனைவி பிரிட்ஜெட்டிடம் தனது கையைப் பிடிக்குமாறு சைகை காட்டிய போதும் அவர் அதை மறுத்துள்ளார்.

மக்ரோனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றதுடன் ஜனாதிபதி மக்ரோன் இது குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *