வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ByEditor 2

May 26, 2025

ரூபாய் 354,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தஇலங்கைஇளைஞர்ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்லும் போது, விமான நிலைய காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை (23) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யட்டியந்தோட்டை பகுதியில் வசிக்கும் 21 வயதுதொழிலதிபர் ஆவார் அவர் இந்த சிகரெட்டுகளை டுபாயில் இருந்து வாங்கி,கத்தார் தோஹாவிற்கு வந்து,அங்கிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவர் தனது பொருட்களில் உள் 20,000 “பிளாட்டினம்” சிகரெட்டுகளையும் 3,600 “மான்செஸ்டர்” சிகரெட்டுகளையும் எடுத்துச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பயணியையும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளையும் வௌ்ளிக்கிழமை (23) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய காவல் துறையின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் எல்மோமால்கம் பேட்டின் அறிவுறுத்தலுக்கமைய மற்றும் மேற்பார்வையின் கீழ்,காவல்துறை ஆய்வாளர் செனவிரத்ன, காவல்துறை சார்ஜென்ட் 70055 பிரேமதிலக்க, காவல்துறை கான்ஸ்டபிள்கள் 56766 திஸாநாயக்க மற்றும் 106733 கசுன் ஆகியோரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *