ஆயுர்வேத மருந்து என போதைப்பொருள் விற்பனை

ByEditor 2

May 23, 2025

திருகோணமலை   கந்தளாய் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்க ளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கந்தளாய் நகரில் இயங்கி வந்த ஆயுர்வேத மருந்தகத்தின் மூலமாகவே இந்த செயல்களில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மாணவர்களை குறிவைத்து, போதைப்பொருள்  விற்பனை

குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி திஸ்ஸ விதானகேவின் வழிகாட்டுதலின் கீழ், இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது எட்டு பெட்டிகளில் மொத்தம் 10,920 போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பெறுமதி ரூ.21,84,000 என தெரிவிக்கப்படுகிறது.

கைதான சந்தேக நபர், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்  பாதுகாப்பற்ற வகையில் மாணவர்களை குறிவைத்து, போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டமை பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *