இலங்கையில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம்

ByEditor 2

May 23, 2025

இலங்கையில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை (24) வழங்கப்படவுள்ளன.

இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கை

இலங்கையில் தாதியர் சேவை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாளைய நிகழ்வு வேளையில் தாதியர் சேவையில் 79 சிறப்புத் தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *