சபை ஊழியர்களின் உணவு கட்டணம்: மும்மடங்காக அதிகரிப்பு

ByEditor 2

May 22, 2025

பாராளுமன்த்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க பாராளுமன்ற சபை குழு தீர்மானித்துள்ளது.

1000 ரூபாயாக இருந்த சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம்   3600 ரூபாவாக அதிகரிக்கும். பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் உணவுக் கட்டணத்தை 1500 ரூபாவிலிருந்து 4000 ரூபாவாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் சமர்ப்பித்த முன்மொழிவைத் தொடர்ந்து மாதாந்த உணவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் தினசரி உணவுக் கட்டணம்   2000 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *